இன்றைய உலகில் மக்கள் நடப்பு முறைகளை நம்ப மறுத்து ஏதோ ஒன்றை எந்த விலைகொடுத்தும் வாங்கத் தயாராக இருக்கிறார்கள். கற்பனையில் மிதக்கிறார்கள். அளவுக்கு மீறிய எண்ணங்களில் மிதந்தபடி அனைத்தையும் உடனே அடைந்துவிடத் துடிக்கிறார்கள். பொறுமை இழந்து தவிக்கிறார்கள். அறிவியல் வளர்ந்தாலும் அமைதியைத் தரவில்லை. இந்த நிலையில் வாழ்க்கையே ஒரு வகுப்பறை என உணர்ந்து உலகப் பாடங்களைக் கற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் வாழ்க்கையின் இன்றைய சூழ்நிலைகளை விளக்குவதாக அமைந்த நூலே "சட்டம் ஒரு வகுப்பறை" என்பது, 21 தலைப்புகளில் பல்வேறு நிலையில், சூழ்நிலைகளின் அடிப்படையில் இன்றைய கண்ணோட்டத்தில் எடுத்துக்காட்ட முயன்றுள்ளது இந்த நூல். வாழ்க்கையைப் பாதிக்கின்ற அறியாமையையும் அவற்றுக்கான தீர்வுகளையும் தருகின்ற வகையில் அமைந்துள்ள நல்ல வழிகாட்டி நூல்.
Be the first to rate this book.