எந்தஇலக்கிய வடிவங்களைவிடவும் கவிதைக்குத்தான் அதிக வேலைகள் இருக்கிறது. இந்தப் புரிதலில் இருந்துதான் சாமி கிரிஷ் கவிதைகள்உலகை எதிர்கொள்கின்றன. 'ஒருவரின் நிழல் மட்டுமே அவரவரின் நிரந்தர உறவாகிறது' என்று எழுதும் சாமி கிரிஷ் கவிதைகள்சராசரி வாழ்விலிருந்து விலகாமல் இன்றைய வாழ்வின் எல்லா பக்கங் களையும் எளிய கவித்துவமான மொழியில்எழுதிய எதார்த்தங்களின் தோரணமாக ஒருபுறம் காட்சியளிக்கின்றன. மறுபுறம் நீருக்கு நிறம், மனம், சுவை, வடிவம் கிடைத்துவிட்டது; நீதிதான் கிடைக்கவே இல்லை என்று எழுதி சமகாலத்தில் புரையோடிப்போன சமூகத்தின் மனிதமற்ற செயல்களை வெளிப்படுத்தும் வேலையையும் செய்கின்றன என்று பொதுவாகக் குறிப்பிடலாம். பூக்களால் ஆன நிழலை பிரதிஎடுக்க அதே அளவிலான சருதகள்சரியாய் இருக்கும். பாதைகளை கால்களன்றி மூளையாலும் மிதித்துச் செல்லும் அனுபவத்தை எழுதி எழுதி திருப்தியுறும் ஒவ்வொரு கவிதையும் ஒரு காட்சி அனுபவத்தைப்பதிவுசெய்வதில் வெற்றி பெற்றிருக்கின்றன.
-பூவிதழ்உமேஷ்
Be the first to rate this book.