உலகில் நீரிழிவு நோயாளிகள் அதிகம் உள்ள நாடுகளில் சீனாவுக்கு அடுத்து இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. சுமார் 7 கோடி சர்க்கரை நோயாளிகள் இந்தியாவில் உள்ளனர் என்று பல்வேறு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இன்று ஒரு குடும்பத்தில் ஒருவருக்காவது நீரிழிவு நோய் இருக்கிறது. நீரிழிவு உள்ளிட்ட தொற்றா நோய்கள் மக்களுக்கு பெருஞ்சுமையாக மாறி வருகின்றன.
தொற்றா நோய்கள் பெரும்பாலும் நாட்பட்ட நோய்களாகவே உள்ளன. நோய் ஏற்பட்ட பிறகு மீதியுள்ள வாழ்நாட்கள் எல்லாம் சிகிச்சையைத் தொடர வேண்டிய நிர்ப்பந்தம். என்னிடம் சிகிச்சைக்கு வருபவர்களில் பலரும் நீரிழிவு நோயாளர்கள்தாம். அவர்கள் கேட்கும் முதல் கேள்வியே சித்த மருத்துவம் நீரிழிவை முழுமையாகக் குணப்படுத்துமா? என்பதுதான். இன்னும் பல கேள்விகளும் சந்தேகங்களும் அவர்கள் மனதில் நிலவுகின்றன. ஒவ்வொருவருக்கும் பதில் சொல்லி தெளிவுபடுத்துகிறேன்.
நீரிழிவு நோயாளிகள், பொதுமக்கள் என அனைவருக்குமே சரியான தகவல்களைச் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்த சிறு நூலை எழுதியுள்ளேன். ஒரு சித்த மருத்துவரின் பார்வையில் இந்த நூல் அமைந்துள்ளது. நீரிழிவுக்கு சித்தா ஒரு வரம்தான். சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதோடு நோயை சித்தா மூலம் குணமாக்கவும் முடியும். நீரிழிவுக்கான சித்த மருத்துவ சிகிச்சை, மருந்துகள், உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மனநலம் என அனைத்தையும் எனது அனுபவ அறிவின் பிழிவாக இந்நூலில் தந்துள்ளேன். வாட்ஸ்-அப் உலகின் மிகை தகவல்களால் குழம்பிப் போய் இருப்பவர்களுக்கு இந்த நூல் தெளிவைத் தரும். சித்த மருத்துவத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும்.
- டி.பாஸ்கரன்
Be the first to rate this book.