தைகிரீஸ் நதியைக் கடக்க பாலமமைப்பதற்காக பஸரா, பக்தாத் நூலகங்களிலிருந்து கொண்டுவந்து கொட்டப்பட்ட முஸ்லிம்களின் புத்தக்குவியல்களிலும் இஸ்லாமிய அந்தலூசியாவின் கிரனடாவிலும் குர்துபாவிலும் எரிக்கப்பட்ட வாசகசாலைகளிலும், வெளிவராத எத்தனையோ வரலாற்றுக் கதாநாயகர்களின் சரித்திரங்கள் அடுத்த தலைமுறையினருக்குக்கூடத் தெரியாது போயிருக்கலாம்.
பேரரசுகளின் எழுச்சியும் வீழ்ச்சியும் மட்டும்தான் சரித்திரமா?
தனிமனிதர்களாய் பெரும் ஒரு பரப்பு மனிதர்களுக்குப் பாதை காட்டிவிட்டுப்போனவர்களும் சரித்திரர்கள்தான். அதிலும் ஆண்களின் சாதனைகளே போப்படும்போது எங்கெங்கோ மூலைகளில் விசுவரூபம் எடுத்து ஆண்களுக்கு நிகராய் 'கெத்து' காட்டி வாழ்ந்து வழிகாட்டிவிட்டுப்போன இந்தப் பெண்களின் சரித்திரங்களும் நிச்சயம் பேசப்பட வேண்டியவையே!
Be the first to rate this book.