கையில் ஜீவனுள்ள எழுத்தையும், கருத்தில் மேன்மைமிக்க மார்க்சியத்தையும் தாங்கியுள்ள தோழர் ஜீவபாரதியின் பரந்துபட்ட பார்வைக்கும், தேக்கமில்லாத தேடலுக்கும் இந்த நூல் சிறந்த சான்றாக அமைகிறது. நாடகப் பாங்கில் அமைகின்ற பாத்திர வார்ப்புகளான மேஜர் பரமசிவம் (தோழர் பார்வதி கிருஷ்ணனின் மூத்த சகோதரர்), பூட்டு திருடிய சிறுவனைக் காப்பாற்றிய கலைவாணர் என்.எஸ்.கே., “அவளுக்கு அவளே ஆசிரியர்; அவளுக்கு அவளே மாணவி” என்று கல்வி கற்கும் கைகள் இழந்த மாணவி வித்யஸ்ரீ ஆகியோர் பற்றிய நெஞ்சை உருக்கும் கட்டுரைகளை காவியச் சாயல் கொண்ட மறுபதிப்பு எனலாம்.
Be the first to rate this book.