கா.சிவாவின் கவிதைகள் மரபார்ந்த வழியில் அல்ல, நேரடியான உரைநடை மொழியில் அந்தரங்கமாக வெளிப்பட்டவை. செய்யுள் தன்மையில் அமையாது நவீன கவிதையின் செறிவார்ந்த மொழியும் இல்லாமல், உளக்குமுறல்களுக்கே உண்டான ஒரு கலவை மொழியில் இக்கவிதைகள் அமைகின்றன. ஒரு வகையில், இவை மன்றாட்டின் பாடல்கள்.
இக்கவிதைகள், கலைக்கும் அதன் ஆராதகனுக்கும் இடையில் நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டம். தெய்வத்திற்கு அது மற்றுமொரு நாடகமாக இருக்கலாம். எழுத்தாளரிடமிருந்து துளிர்ப்பது உண்மையான கண்ணீர்த் திவலைகள். கண்ணீரை எடை போட முடியாது. அது கலையாக சித்திக்கக் காத்திருக்கலாம். சிந்திய துளிகளில் இருந்து கடல் திரளட்டும்.
- பார்கவி
Be the first to rate this book.