“ ‘சங்காரம்’ நாவல் இரா.சரவணனின் இன்னொரு முகம். கொலை, ரத்தம், குரூரம் என ஒவ்வொரு பக்கத்தையும் தீப்பிடிக்கும் விறுவிறுப்பில் அவர் கொண்டுபோயிருக்க முடியும். ஆனால், இந்த வாழ்வின் அத்தனை மனிதர்களையும் கதாபாத்திரங்களாக்கி எளிய வாழ்வையும், அறத்தையும், பெருந்தன்மையையும் இரா.சரவணன் இதில் பந்தி வைத்திருக்கும் விதம் சிலிர்க்க வைக்கிறது” ~ இயக்குநர் சசிகுமார்
“இக்கதையில் இடம்பெறும் பெண் பாத்திரங்கள், அவை எழுதப்பட்ட விதம்… ஆண்களின் அகமும் உலகமும் பெண்களை எப்படிப் பார்க்கிறது… எவ்வளவு தூரம் ஒடுக்குகிறது; சுரண்டுகிறது; தேவைப்படும் நேரத்தில் எப்படி கண்ணீரோடு மண்டியிடுகிறது; பின் ஏமாற்றுகிறது என்பதை மிகக் கறாராக ஓர் ஆண் தன்னிலையாக அல்லாமல், விலகி நின்று எழுதி இருக்கிறார் இரா.சரவணன்” ~ கவிஞர் வெய்யில்
Be the first to rate this book.