சங்கப்புலவர்கள் பாடிய தமிழை குங்குமம் இதழில் நூறுகிழமை எளிய நடையில் எழுதிட முனைந்து என்னாலியன்ற பணியினை முடித்தேன். கடல் குளித்து முத்தெடுக்கும் போதும், கனிகள் வெட்டிப் பொன் குவிக்கும்போதும், களிப்பு துள்ளும் உள்ளத்தைப் போலே - இந்தக் கலைஞனது உள்ளமுமே துள்ளுவது உண்மை! கருவூலப்பொருள்கூட அள்ள அள்ளக் குறையும்; - சங்கக் கவிப்பெரியோர்கள் கற்பனையோ அகழ்கின்ற ஊற்றாக நிறையும்! பழம்புலவர்பெருமக்கள்; தமிழர் வீரம், காதல், பண்பாடு போற்றுகின்ற வாழ்க்கை நெறிமுறைகள்; பாட்டாலே தொகுத்தளித்து; நம்மைப் பிற நாட்டாரும் போற்றுகின்ற செயல் புரிந்தார்! ஏடுகளாய் எழுத்துக்களாய் வாழ்கின்ற - அந்தப் பீடுநிறைப் பெரியோர்க்கு வணக்கம் சொல்லி; காடுகளில் மலைச்சோலைகளில் கபிலப்புலவன் கண்டறிந்து குறிஞ்சிப்பாட்டில் கோடிட்டுக்காட்டியுள்ள;மலரையெல்லாம் பறித்தெடுத்து என் மனம் பறித்த மாத்தமிழ்ச் சுவடிகள் மேல் மாரியெனப் பொழிந்திடுவேன்!
Be the first to rate this book.