முளையிலே தெரிந்த பயிர் அ.மோகனா. ஆய்வு மாணவியாக சென்னைப் பல்கலையில் இருந்த போது சந்தியா பதிப்பகத்தின் விழைவின் பேரில் இவர் எழுதிய ‘தமிழில் விலாச நூல்கள்’ (2012) என்ற நூலுக்கு எஸ் ஆர் எம் பல்கலை தமிழ்ப் பேராய விருது அளித்தது.
ஒன்றரை லட்ச ரூபாய் பரிசுடன் கூடிய இவ்விருதுடன் இவரது சாதனைப் பயணம் தொடர்ந்தது. இதுவரை நான்கு ஆய்வு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
நாகசுந்தரம் விருது, வானமாமலை விருது ஆகிய விருதுகளும் இவர் பெற்றுள்ள சிறப்புகளில் சேரும்.
சமீபத்தில் புனைவிலக்கிய உலகிலும் புகுந்து வெளிச்சம் பெற்றுள்ளார்.
இவரது சமீபத்திய படைப்பு சங்க இலக்கியம்: வடிவம் – வரலாறு – வாசிப்பு. தற்போது மதுரை தியாகராயர் கல்லூரி தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
இவர் ஒரு விளைபயிர்.
1 Very bad customer service
Bought books for Rs19,000 but the books delivered to wrong address. The customer service representative was very rude and harsh stated we don't need this kind of customers. Worst customer service ever encountered.
Viswanathan Maniam 03-07-2024 03:03 pm