சங்க இலக்கியத்தின் பாடல் சிறப்புகளைத் தனித்தனிக் கட்டுரைகளாக்கி முழுமையான நூல் ஒன்றைச் செய்திருக்கிறார் சக படைப்பாளி வளவ.துரையன்.
வயதிலும், அனுபவத்திலும், படைப்பாற்றலிலும், படைப்பு நேர்மையிலும் யாம் தோள்சேர்ந்து நடப்பவரே.
அவரது செம்மையான பணிகளில் முக்கியமானது இந்நூல்.
சங்க இலக்கிய நயங்கள், உவமைகள், இயற்கைச் சூழல், அறம், வீரம், பண்பாட்டுக் கூறுகள், மொழிச் சிறப்பு, சொல்லாட்சி எனப் பல்வேறு கூறுகளை வாசகருக்குத் தருகிறது இந்நூல்.
-நாஞ்சில் நாடன்
Be the first to rate this book.