புராணங்கள் கூறும் வரையறுப்பு, மனு நூல் சொல்லும் வரையறுப்பு ஆகியவற்றை நோக்கினால், பாரதம் என்பது ஆரிய ஆட்சிப் பகுதி, நால்வர்ணப் பிரிவு பாரத சமூகத்தின் கட்டமைப்பு என்பது தெளிவாகும். இவற்றையெல்லாம் காரணம் காட்டிதான் இந்திய அரசமைப்பு அவையின் விவாதத்தில் பங்கு பெற்ற காங்கிரசு, ஃபார்வாடு பிளாக் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் இந்தியாவிற்கு பாரதம் எனப் பெயர் சூட்ட வேண்டும் என வாதிட்டார்கள். சனாதன தர் மம் என்ற பெயரால்தான் இதனை வலியுறுத்தினார்கள்.
பாரதம் என்பது ஆரிய ஆதிக்கத்தை, சமற்கிருத மேலாண்மை யை, வர்ணசாதிப் பிரிவினையை வலியுறுத்துகிறது என்பதால் தான் பாரதம் என்ற ஒற்றைப் பெயரை பாசக வலியுறுத்துகிறது. இதே காரணத்தால் தான் காங்கிரசும், பிற வடநாட்டுக் கட்சிகளும் மறுப்புச் சொல்லாமல் பின் செல்கின்றன.
Be the first to rate this book.