சொல்மரபின் மடக்குகளில் உறையும் வரலாறுகள்:
இதுவரையிலான வரலாறு என்பது ஆன்வோரின் வரலாறாக, ஓt ஒற்றைச் சொல்லாடலாக, தட்டையானதோர் ஒற்றைத் தடத்தில் தொடர்ந்து செல்லும் ஒன்றாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் வெகுசனங்களின் பார்வைகள், மொழியாடல்கள், அனுபவங்கள், ஞால்கள், நினைவுக் குறிப்புகள், அறிவுத் தேடல்கள்,வரலாறுகள், கவனம் பெறாதும் பார்க்கப்பெறாதும் கேட்கப்படாதுமே போயுள்ளன.
வாழ்வு, உண்மை என்பது பன்மைத் தன்மையானது. இப்பன்மைத் தன்மையை அப்பட்டமாக வெளிப்படுத்துவதே வரலாறு. வாலாறும் பன்மைத் தன்மையதே சனங்களின் சமூக வெளி மிகக்குறுகிய ஒன்றாக மாற்றிப் போடப்பட்டு விட்டது. அச்சனங்களின் அடையாளங்களற்ற ஆனாலும் வெகு ஆழமிக்க வாவாற்று ஓர்மைகளையும் பேச்சு மறுக்கப்பட்ட சனங்களின் வரலாற்றுச் சொல்லாடல்களையும் அதனதன் தளத்தில் வைத்து மீள்உருச் செய்வது இன்றைய சூழலின் தேவையாகும்.
அவ்வகையில் இந்த நூல் சனங்களின் மறுக்கப்பட்ட ஓரங்கட்டப்பட்ட வரலாறுகளை மீளவும் அதனதன் இடத்தில் இருத்தி வைக்க முயற்சி செய்கிறது. சமூகங்களின் சொல்மரபுகளில் ஒளிந்துள்ள வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யவும் முயற்சி செய்கிறது. இம்முயற்சியினை இந்நூல் அறிவார்ந்த தளத்தில் தருக்க ரீதியாகவும் சரியாகவும் எடுத்து வைக்கிறது.
Be the first to rate this book.