சம்பூர்ண மூன்று தலைமுறைகளாக கையெழுத்தில் பாதுகாத்த 'சம்பூர்ணராமாயணம்' கூத்துப் பிரதி, முதல் முறையாக அச்சுக்கு வருகிறது. அழிந்து வருகிற கூத்துக் கலைக்கு ஓர் அருங்கொடை இந்நூல். தமிழகத்தின் தொன்மக் கலையாக விளங்குவது கூத்து. தென்னாட்டு இறை சிவன் ஆடிய கலை. இதனால் முதல் கூத்தன் எனும் சிறப்பைப் பெற்றவன் சிவன், ஆடற்கலை, நடிப்புக்கலை, இசைக்கலை, ஒருங்கே இணையப் பெற்றது கூத்து இயல், இசை, நாடகம் அடங்கிய மொழி என்பதால் தமிழை முத்தமிழ் என்பர் இசை, நாடகம், மட்டுமில்லை. ஓசை ஒழுங்குடைய இயலும் கூடியதே கூத்துக் கலை. கொடுகொட்டி, பாண்டரங்கம், அல்லியம், மல்லாடல், துடிக்கூத்து, குடையாடல், குடம், மரக்கால் ஆடல், பேடியாடல், பாவையாடல், கடையம் என பதினொரு வகை கூத்துகளைச் சொல்கிறது சிலப்பதிகாரம், இதன் அத்தனை அடுக்குகளும் தெருக்கூத்தில் அடக்கம் நாம் வாழும் காலம் கூத்தைப் புறக்கணித்து விடாதபடி, ஒவ்வொரு மேடையிலும் தன்னை புதுப்பித்துக் கொய்வநுதான் கூத்துக் கலையின் சிறப்பு, கம்பர் எழுதிய, வால்மீகி எழுதிய ராமாயணங்களில் இருந்து, சம்பூர்ண ராமாயணப் பிரதி விலகவும் செய்கிறது. நெருங்கவும் செய்கிறது. இதுவே இப்பிரதியின் அழகு அம்மன் கோயில் திருவிழா இரவுகளில், எங்கள் பால்யத்தை வனப்பு செய்தவை வடக்கத்தி கூத்துகள் அவற்றில் ஒன்று சம்பூர்ண ராமாயணம் காலத்தின் பழுப்பேறிய இப்பிரதியை அடையாளம் கண்டு, அதை அச்சில் கொண்டு வந்திருக்கிறார் நாட்டுப்புற ஆய்வாளரும், கலிஞருமான முனைவர் இரத்தின புகழேந்தி, இவ்வரிய செயலால் பயனுறுகிறது தமிழர் கலை.
-கரிகாலன்
Be the first to rate this book.