செல்வி மு. மோகனலட்சுமி தமிழில் M.A., M.Phil., Ph.D. பட்டங்களும் கல்வியியலில் M.Ed. பட்டமும் சுவடியியலிலும் (Diploma in Manuscripts) மற்றும் மராத்தி மொழியிலும் (Diploma in Language Education) என இரண்டு பட்டயங்களும் பெற்றுத் தம் படிப்பறிவையும் பட்டறிவையும் வெகுவாக வளர்த்துக்கொண்டவர். தமிழ் மொழி இலக்கியம், சுவடிப்பதிப்பியல், போன்ற துறைகளில் பெயர்பெற்றவர். சேலம், பெரியார் பல்கலைக்கழகம், கோயமுத்தூர், பாரதியார் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகம், சென்னை, தமிழ்நாடு ஆசிரியர் கல்விப் பல்கலைக்கழகம், மைசூரு, இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் ஆகிய நிறுவனங்களில் கல்வி கற்றவர். மொழிகளின்.
சிறந்த ஆய்வாளர் மாநில விருது-2019', 'அகத்தியர் விருது', 'பாவேந்தர் பாரதிதாசன் விருது', 'இளம் ஆய்வாளர் விருது-2021' ஆகிய விருதுகள் அவருடைய அறிவுக்கும் பட்டறிவுக்கும் சான்றுகளாக நிற்பவையாகும்.
'தொல்காப்பிய உரைப் பதிப்புகளும் பதிப்பாசிரியர்களும்' என்னும் நூலின் ஆசிரியராகவும், 'மொழியியல் நோக்கில தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்கள்" என்னும் நூலின் தொகுப்பாசிரியராகவும் உள்ளார். இருபதுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளைப் படைத்து வெளியிட்டிருக்கும் இவர், சுமார் 44 பணிமனைகளிலும் கருத்தரங்குகளிலும் பங்கேற்றுத் தம் திறன்களை வளர்த்துக்கொண்டவர். UGC SET, NET தேர்வுகளில் வெற்றிபெற்றுத் தற்போது கோவையிலுள்ள PSG கல கலை அறிவியல் கல்லூரியில்' உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்துவருகிறார்.
'சமூகவியல் நோக்கில் தொல்காப்பியப் பதிப்புகள்' என்னும் தலைப்பில் ஆராய்ச்சிசெய்து தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு வழங்கி, முனைவர் பட்டம் பெற்றவர். அந்த ஆய்வேட்டையே இந்நூலாக்கி இளம் தலைமுறையினர் பயனுறுமாறு வெளியிட்டிருக்கிறார்.
Be the first to rate this book.