"வலிமையான தலைமை காரணமாக மற்றவர்கள் பெற்ற விடுதலையைத் தேவேந்திரர் பெற முடியாமற்போன சூழ்நிலையில், அவர்களுக்கு ஓர் அரிய தலைவராக சமூக உரிமைப் போராளி இம்மானுவேல் தேவேந்திரர் வாய்க்கின்றார். இருபதாம் நூற்றாண்டின் ஐம்பதுகளில் ஒரு சிங்க ஏறாகப் பயணம் புறப்பட்ட அவருடைய வாழ்க்கை - அஞ்சா நெஞ்சம் படைத்த வாழ்க்கை - சமூக நீதியின் அதிர் முரசமாக அமைந்த வாழ்க்கை ஒரு மின்னல் வீச்சுப்போல் 1957 - இல் உயிர்த் தியாகமாக முடிந்து போனதை வேதனை வரிகளில் தமிழவேள் படம்பிடித்துக் காட்டுகிறார்."
-பேரா. சிற்பி
"இன்று தென்மாவட்டங்களில் தேவேந்திரர்கள் ஒரு போர்க்குணமிக்க அரசியல் சக்தியாக உருப்பெற்றிருக்கிறார்கள் எனில் அதற்குப் பின்புலமாகத் தோழர் இம்மானுவேல் அவர்களின் செயல்பாடுகளும், அதன் விளைவான அவரது கொலையும், அதை ஒட்டி எழுந்த தேவேந்திரர்களின் எழுச்சியும் உள்ளன என்பதை நாம் மறந்துவிட இயலாது. இதுவே முதுகுளத்தூர் கலவரத்தின் மூலம் தேவேந்திரர் பெற்ற பெரும்பயன்... ஒரு முக்கியமான வரலாற்றுக் கட்டத்தில் வந்துள்ள ஒரு முக்கியமான நூல் இது."
-பேரா. அ. மார்க்சு
Be the first to rate this book.