குரலற்றவர்களின் உரிமைகளுக்காக தங்கள் ரத்தம், வியர்வை, மற்றும் கண்ணீரை செலுத்தி, தனி மனிதராகவும், இயக்கமாகவும்,ஒரு நின்று தேசமெங்கும் போராடிய, போராடிக் கொண்டிருக்கும், சமூக நீதிப் போராளிகளின் குரலொலியையும், பயணத்தையும் உங்கள் சிந்தையுள் சுவீகரிக்க உதவும் அரிய நூல் இது...!
சமூக நீதியின் நூற்றாண்டு இது...!
சமூக நீதிக்கு பங்கம் வந்தால் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் பாதிப்பு ஏற்படும் என்பதற்கான விழிப்புணர்வு இன்றைய உடனடித் தேவை.
சமூக நீதிக்கான போராட்டம் என்பது அரசியல் அதிகாரத்திற்கான போராட்டம் அல்ல. சமூக அதிகாரத்திற்கான போராட்டம்...! எங்கெல்லாம் பாகுபாடு விலக்கு தீண்டாமை அடிமைத்தனம் அநீதி இருக்கிறதோ, அங்கெல்லாம் சமூக நீதிதான் இந்த விஷங்களைத் தீர்க்கும் மருந்தாக இருக்கும்...!
ஒரு குடை, வானிலையின் மோசமான விளைவுகளுக்கு எதிராக தங்குமிடமும் பாதுகாப்பும் வழங்குகிறது. சமூகப் பாதுகாப்பு என்பது மழை அல்லது வெப்பத்தில் குடை போன்றது.
சமூகநீதி அரசாளும் தேசம், மக்களின் சமூக பாதுகாப்பு தோமாகிறது...!
தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி. சமூக நீதி என்பது சமூகத்தின் ஒட்டு மொத்த நியாயத்தையும் குறிக்கிறது... அனைவருக்கும் ஒரு நியாயமான சமூக அமைப்பை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது...!
நீதி இல்லாமல் ஒரு அரசும், சமூகமும் உருவாக முடியாது என்பதை அழுத்தமான குரலொலிகளால் அதிர செய்கிறது இந்த ஆவணம்...!
Be the first to rate this book.