இந்நூலாசிரியர் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் பாகூரில் பிறந்து, பள்ளிப் படிப்பை அங்குள்ள அரசு பாரதியார் மேல்நிலைப் பள்ளியில் பயின்றவர். தமிழில் இளங்கலைப் படிப்பைப் பாரதிதாசன் பெண்கள் கல்லூரியிலும் முதுகலைப் படிப்பைக் காஞ்சிமாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்திலும் முடித்தவர். இள முனைவர் மற்றும் முனைவர் பட்டங்களைப் புதுவைப் பல்கலைக் கழகத் தமிழியற் புலத்தில் நாட்டுப்புறவியலின் மீது கொண்ட இயல்பான ஈடுபாடு காரணமாக ஆய்வு செய்து வெற்றி கண்டவர். LL பரமேஸ்வரி அவர்கள் புதுவையின்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியிலுள்ள அகிலாண்டேஸ்வரி மகளிர் கலைக் கல்லூரியில் ஐந்தாண்டு காலமும் அங்குள்ள தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலை அறிவியல் கல்லூரியில் ஐந்தாண்டு காலமும் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிய ப. பரமேஸ்வரி அவர்கள் தற்போது திண்டிவனம் புனித அன்னாள் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி வருகின்றார். பணிக் காலங்களில் 12 இளம் முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு மேற்பார்வையாளராக இருந்து பட்டங்களை முடித்துக் கொடுத்துள்ளார். தற்பொழுது இவரிடம் நான்குபேர் முனைவர் பட்ட ஆய்வினைச் செய்து வருகின்றனர்.
செம்மையான களப்பணி. அயராத உழைப்பு, ஆர்வமுள்ள படிப்பு ஆகியவற்றால் தான் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து கொண்டிருக்கின்ற களத்தை அடிப்படையாகக் கொண்டே சிறப்பான முனைவர் பட்ட ஆய்வினைச் செய்த ப. பரமேஸ்வரி அவர்கள் அதை நூலாகக் கொண்டுவந்துள்ளார். நாட்டுப்புற மக்களின் வழிபாட்டில் அவர்களின் மரபார்ந்த பண்பாடு எப்படியெல்லாம் வெளிப்படுகின்றன என்பதை இந்நூலின் மூலம் அறியலாம். முனைவர் U. பரமேஸ்வரி அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துக்களும்,
பேராசிரியர் ஆ.திருநாகலிங்கம்
மேனாள் புல முதன்மையர், தமிழியற் புலம், புதுவைப் பல்கலைக்கழகம்
காவ்யா
Be the first to rate this book.