பக்தி என்பது எளிமையான விஷயம். அரசு உருவாக்கத்திற்குத் தேவையான விஷயம் பக்திதான். ஒட்டுமொத்தமாகக் கடவுளிடம் சரணடைவது என்பதுதான் பக்தி, எல்லாவற்றையும் அவன் பார்த்துக்கொள்வான். "நன்றே செய்வாய்! பிழை செய்வாய்! நானோ இதற்கு நாயகமே" என்பது திருவாசகம். ஒட்டுமொத்தமாக இறைவனிடம் சரணடைவது இந்தக் காலத்தில் உண்டாகிவிட்டது. இப்போது அரச அதிகாரம் பெருகப்பெருக, விளைநிலங்களின் அளவு பெருகப் பெருக, உபரி பெருகப்பெருக, காணாமல் போன பழைய பாணர்கள் இழுத்து வரப்பட்டுக் கோயில்களில் நிலையாக அமர்த்தப்பட்டார்கள். அதைப் பாடுவதற்குப் பதிலாக இதைப் பாடு: அதே கருவியை வைத்துக்கொள் என்று கூறிவிட்டார்கள்.
இசை என்பது மனிதனின் உயிர்ப்பான விஷயங்களில் ஒன்று. மதச்சார்பு எல்லாவற்றையும் தள்ளிவிட்டு இசையைப் பாருங்கள். தாலாட்டுக்கும் குழந்தைக்கும் உள்ள உறவைப் பார்த்தாலே மனிதனுக்கும் இசைக்கும் உள்ள உறவு புலப்படும்.
- தொ.பரமசிவன்
Be the first to rate this book.