இந்திய நாட்டின் பண்பாட்டு ஒற்றுமைக்குச் சமணமும் பௌத்தமும் மிக அதிகமாக வேலை செய்துள்ளன. சாதித் தடைகளையெல்லாம் உடைத்தெறிந்து ஒவ்வொரு விதமான சடங்குகளையும் உதறித்தள்ளிவிட்டுப் புத்தமதத்தைத் தழுவும்படி வேறுபாடின்றி எல்லா மக்களையும் எதிர்கொண்டழைத்தது. இத்தகைய விரிவான மனப்பாங்கு இந்தியாவில் மட்டுமின்றி, ஆசியாவின் மற்றையப் பகுதிகளிலும் விரிவாகவும் விரைவாகவும் புத்தமதம் பரவுவதற்குக் காரணமாயிருந்திருக்கலாம்.
Be the first to rate this book.