இந்நூலில் இடம்பெற்றுள்ளவற்றை நூல் அறிமுகம், மதிப்புரை என்பதைத்தாண்டி ஆய்வுக் கட்டுரைகள் என்ற அளவில் வைத்து உற்று நோக்கலாம். மதிப்புரைக்கு உட்படுத்தியிருக்கிற நூல்களை ஆக்கியோர் அனைவரும் புலமைபெற்ற ஆளுமைகள். அவர்களின் ஆய்வுகளை வாசித்தலும் வெளிப்படுத்தலும் எளிதில் முயன்று சாத்தியப்படுத்துதல் இயலாதது. அதற்கு ஆய்வு உழைப்பைத் திறம்படச் செலுத்துதல் இன்றியமையாதது. இந்நூலாசிரியரான முனைவர் க. அய்யனார் அர்ப்பணிப்புடன் ஆய்வு உழைப்பைத் தந்திருக்கிறார்.
நூல் அறிமுகங்கள் வழியாகவும் படித்தவர்களின் அனுபவமொழி மூலமாகவும் நூலை வாங்கிப் பயன்பெறுதல் என்பதே இயல்பான இயங்கியல். இந்நிலையில் ஆய்வு நோக்கில் மதிப்புரைகளை எழுதி ஆய்வுச் சூழலுக்கு அளிப்பவர்கள் நெறிப்படுத்தும் வழிகாட்டிகள் என்ற நிலையைப் பெறுவார்கள். இந்நூலாசிரியரும் அந்தப் பெருமையைப் பெறுகிறார்.
- முனைவர் இரா. தமிழ்ச்செல்வன்
Be the first to rate this book.