இலக்கியமும் சிக்கல்களும் சரிக்குச் சரியாகக் கலந்த வாழ்க்கை சல்மான் ரஷ்டியுடையது. ஒரு புத்தகத்துக்காக, இன்னும் சரியாகச் சொல்வதென்றால், அதில் சில பக்கங்களுக்காகக் கிட்டத்தட்ட பத்தாண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டவர் அவர். அதன்பிறகும் பல தொல்லைகள் அவரைத் தொடர்ந்து துரத்திவந்தன. இத்தனைக்கு நடுவிலும் அவர் படைப்பூக்கத்தை விட்டுக்கொடுக்கவில்லை என்பதுதான் அவருடைய வாழ்க்கையின் பெரிய செய்தி, பாடம்.
இந்தியாவைக் கதைகளின் வழியாக உலகுக்கு அறிமுகப்படுத்திய மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான சல்மான் ரஷ்டியின் பரபரப்பான வாழ்க்கைக் கதை இது, அவருடைய இலக்கியம் தொடங்கிய ஊற்றுக்கண்ணையும், வளர்ச்சியையும், அவர் உண்டாக்கிய தாக்கங்களையும் துல்லியமாக விவரிக்கிறது.
Be the first to rate this book.