இதங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தியவர்கள் எல்லோருமே சாதனை படைத்தவர்கள்தான்.ஆனால், நினைத்துக்கூட பார்க்க முடியாத சாதனைகளைப் படைத்தவர்கள் சிலர் இருப்பார்கள். அவர்களில் அலெக்ஸாண்டரும், அசோகரும், நெப்போலியனும் முக்கியமானவர்கள்.அவர்களுடைய காலத்தில், அவர்கள் அறிந்த உலகத்தின் பெரும்பகுதியை தங்களுடைய ஆளுகைக்கு கொண்டு வந்தவர்கள்.
அலெக்ஸாண்டர் தான் வென்ற நாடுகளில் கிரேக்க நாகரிகத்தை அறிமுகம் செய்தான். மிக இளம் வயதில் இந்தியா வரை தனது படையை நடத்திச் சென்றான்.அசோகர் தனது படை வலிமையால் நாடுகளை வென்றாலும், இறுதியில் போரின் தீமைகளை உணர்ந்து அமைதியை பரப்பினான்.நெப்போலியனோ, அன்றைக்கு இருந்த மன்னராட்சி முறையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தான். இந்த மூன்று பேரரசர்களின் வாழ்க்கையை ஒரே நூலாக படிப்பது சுகம்தானே.
Be the first to rate this book.