சமூகத்தின் முகத்திரையைக் கிழிக்கும் பல பிரமாதமான காவியங்களைப் படைத்தவர் லியோ டால்ஸ்டாய். ஆளால் அவர் எழுதியவற்றிலேயே அவருடைய அந்தரங்கத்தைப் பகிரங்கப்படுத்தும், வாசிப்பவரைத் திருக்கிடச்செய்யும் புளைவு எனில் சாத்தான் குறுநாவலைச் சொல்லலாம். அவர் அதை மிக இழிவான ஒன்றாகக் கருதினார். அந்த நாவலின் கையெழுத்துப்பிரதி மனைவியிள் கண்ணில் பட்டுவிடாதிருக்க, தன் அலுவலக நாற்காலியிள் திண்டுக்குள் மறைத்துவைத்திருந்தார். தான் வாழும் காலத்தில் அந்நாவலை வெளியிட அவர் ஒருபோதும் துணியவில்லை.
ஒருவேளை, அந்தக் கதையில் வரும் பிரபுத்துவ முதலாளி தன்னுடைய பண்ணையில் வேலை செய்யும் குடியாளவப் பெண்ணிடம் கொண்ட பாலியல் இச்சைக்கு மெல்ல மெல்ல பலியானதைப் போன்ற அச்சொட்டாக ஒரு காதல் விவகாரம் டால்ஸ்டாய்க்கும் இருந்திருக்கலாம். எது எப்படியிருப்பினும், இங்கே டால்ஸ்டாயால் முடிவு செய்ய இயலாத வகையில் இரண்டு முடிவுகளைக்கொண்டு இலங்கும் இப்புளைவானது, பாலியல் வேட்கை மற்றும் மனித மனத்தின் கொள்கைப்பிடிப்பு ஆகியவை குறித்த அதியுள்ளத ஆய்வேடாகத் திகழ்கிறது எனலாம்.
Be the first to rate this book.