என்னுடைய படங்களை, இப்போது நடந்துகொண்டிருக்கிற. சமூக அநீதிகளுக்கு எதிரான எதிர்வினைகளாகத்தான் பார்க்கிறேன். சமூக அரசியல் சூழ்நிலையில், சில குறிப்பிட்ட வகை மக்களுக்கு நீதி மறுக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரும்பாலும் நீதி கிடைப்பதில்லை. இதற்குப் பற்பல காரணங்கள் உள்ளன. இப்படி பாதிக்கப்பட்ட மக்கள்மேல் நிகழ்த்தப்படுகிற. இந்த சமூக அநீதிகளுக்கு எதிரான கோபம்தான் எனது திரைப்படங்கள்.
இந்தப் படத்தை எத்தனையோ பாதிக்கப்பட்டவர்கள் பார்ப்பார்கள். நாம் அவர்களின் நிலையை, அவர்கள் அனுபவித்த உணர்வை, அந்த வாழ்வை, வலியை வெளியிலிருந்துதான் பார்க்கிறோம். ஆனால், அவர்கள் அந்த வலியை அனுபவித்தவர்கள். அந்த வலியுடனே வாழ்பவர்கள். நாம் என்னதான் ஒரு உங்களை இந்நிலைக்கு ஆளாக்கியவர்களுக்குத் தண்டனை வாங்கித் தருகிறோம். சிறையில் சமூகமாக, அவர்களிடம் சென்று. அடைக்கிறோம். ஆயுள் தண்டனை வாங்கித் தருகிறோம் என்றெல்லாம் சொன்னாலும், அதெல்லாம் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி அல்ல. இதைப் பாதிக்கப்பட்டவர்கள், தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான, முறையான தண்டனையாகக் கருதவில்லை. இது நீதி இல்லை.
தனக்கு என்ன குற்றம் இழைத்தார்களோ, அதே குற்றத்தை அவர்களுக்குத் திரும்பக் கொடுப்பதுதான், பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி. தங்களுக்கு என்ன மருந்து கொடுத்தார்களோ, அதே மருந்தை அவர்களுக்குத் திருப்பித் தரவேண்டும். இதை நான் இந்தப் பார்வையிலிருந்துதான் பார்க்கிறேன். அந்த வகையில் 'சாணிக் காயிதம்'. சமூக அநீதிக்கு எதிரான திரைப்படம்.
வன்முறை என்பது ஒரு அடுக்குதானே தவிர, நம்மால் எதிர்த்துச் சண்டையிட முடியும், என்பதுதான் இப்படத்தின் ஆன்மாவாக இருக்கிறது.
-அருண் மாதேஸ்வரன்
Be the first to rate this book.