ஹென்றியும், ஓங்கூர் சாமியும் வெவ்வேறு பெயரில் உலாவந்த ஒருவரே. ஹென்றியின் பிற்காலம் ஓங்கூர் சாமியாகக் கழிந்திருக்கும் மானுட மனங்கள் மீது பாயும் கனிவின் முதிர்ச்சியாக. பேபி ஓடிப்போனதும் 'இந்த வீட்டில் வாசற் கதவுகளும் தோட்டத்துக் கதவுகளும் எப்போதும் அவளுக்காகத் திறந்தே கிடக்கும்', என நாவலை முடித்த ஜெயகாந்தனுக்கும் முன்முடிவுகளையும் பின்நினைவுகளையும் பொருட்படுத்தாத அப்பழுக்கற்ற கனிவையும் அகங்காரமற்ற ஆளுமையையும் வெளிப்படுத்தும் இவ்வரிகள் பொருந்தும்.
Be the first to rate this book.