கவிதைப் படைப்பென்பது, நெஞ்சின் அடியாழத்திலிருந்து எதுக்களித்து கொப்பளித்துப் பீறிட்டு, பின்னர் வெற்றிடமாக அரவமின்றி மனசை ஆக்கிரமித்துக்கொள்ள வேண்டும். நம் நெஞ்சின் அடியாழத்திலிருந்து ஒரு ஆழ்ந்த பெருமூச்சோ அல்லது ஒரு சிறு புன்னனையோ வெளிப்பட்டு கவிதை நம்முள் படிய வேண்டும்.
நான் எழுதியுள்ள கவிதைகளை கவிதைகள் என்று சொல்லாமல் “தன்போக்குக் கவிதைகள்" என்று சொல்லலாம். ஏனெனில், அவைகளை எழுதுவதற்கு நான் சிந்திக்கவில்லை; என்னை வருத்திக் கொள்ளவில்லை; காலங்களைச் செலவிடவில்லை. ஒருவகையான ஆசுகவி மாதிரி அப்போதுக்கப்போது தெறித்து விழுந்த வெறும் வார்த்தைக் கோர்வைகளே இவைகள்.
சோ.தர்மன்
Be the first to rate this book.