பரதநாட்டியம் என்ற கலை வடிவத்தைப் பரவலாக்கிய பெருமை ருக்மிணிதேவியைச் சேர்ந்தது. சென்ற நூற்றாண்டில் எதிர்கொண்ட எதிர்ப்புகளை மீறி, ’சதிர்’ என்ற நாட்டிய மரபை, ‘பரதநாட்டியமாக' எல்லோரும் ஏற்கும் விதத்தில் அவர் பிரபலப்படுத்தினார்.
தனது கலைக்கனவை நடத்திக் காட்ட, ’கலாக்ஷேத்ரா’ என்ற கல்வி நிறுவனத்தை 1936-இல் தொடங்கினார். நடனத்துடன் இணைந்த சங்கீதமும் முறைப்படி கிடைக்கச் செய்வதற்காக முழு அர்ப்பணிப்புடன் கூடிய மிகப் பெரிய கலைஞர்களை அவர் வரவேற்றார்.
ஆங்கிலேயர் ஆட்சியின் வர்த்தகக் கொள்கைகளும், சுதந்திரப் போராட்ட கால கதர் ஆடை இயக்கமும் தென்னிந்திய நெசவுத் தொழிலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார். அந்நேரத்தில் நடனத்துக்காக ஆடைகள் வடிவமைத்தலில் ஏற்பட்ட ருக்மிணிதேவியின் ஈடுபாடானது, சேலை நெசவில் புதிய உத்திகள், வடிவங்களாகப் பரிணமித்தது.
நெசவுக் கலையில் மிகப் பழைமையான சேலைக் கரை கோர்வை முறைகளுக்குப் புத்துயிர் கொடுத்ததுடன், புடவை, 'உடல்' டிசைன்களை அவர் அறிமுகப்படுத்தினார். கலாக்ஷேத்ரா பார்டர், கோபுரம் பார்டர், புட்டா டிசைன்கள் என இவரது புடவை டிசைன்கள் இன்றும் புகழோடு நிலைத்துள்ளன. குடியரசுத் தலைவர் பதவி இவரைத் தேடி வந்தது. நாட்டியத்துக்கே தனது வாழ்க்கை என்று கூறி, அதனை நிராகரித்தார்.
நன்றி; தினமணி
Be the first to rate this book.