சென்னை நகரின் மூலக் கூறுகளில் பல்வேறு அம்சங்கள் அடங்கியுள்ளது. அதில் உருது முஸ்லிம் இனக் குழுவும் ஒன்று. அதற்கு, சென்னை மாநகரின் பெரியமேட்டில் உள்ள உருது முஸ்லிம்களின் வணிக ரீதியான தொன்மங்களும், திருவல்லிக்கேணியில் உள்ள பண்பாட்டு ரீதியான தொன்மங்களுமே சாட்சி. அந்தத் திருவல்லிக்கேணியின் பண்பாட்டுத் தொன்மங்களை இந்த "ரூபி"- நாவல் பிரதிபலிக்கிறது.
உலகப் புகழ் பெற்ற மெரீனா கடற்கரையை உள்ளடக்கிய அதன் பிரதான சாலைகள், நவாப் கால மசூதி, அரண்மனை, அமீர் மஹால், மாட மாளிகைகள், மீர்சாகிப் பேட்டை போன்ற நிலவியல் வழியே கடந்து செல்லும் இந்தப் பிரதியில்.
மெல்லிய காதல் கதை வழிந்தோட... அதன் வழியெங்கும் புரதானமான தியேட்டர்களும் அதில் ஆண்டுக் கணக்காக ஓடிய இந்தி திரைப்படங்களும் அதன் நாயகர்களும் இந்தி இசைப் பாடல்களும் பல வண்ண பலூன்களாகப் பறந்து கொண்டிருக்கின்றன. அதன் இன்னொரு பக்கத்தில், உருது கவிதைகளும் கதைகளும் உருது சஞ்சிகைகளும் அதன் வாசகர்களும் தீர்க்கமான பார்வைகளோடு உலவி கொண்டிருக்கிறார்கள்.
இந்த இரண்டு வகையான அனுபவங்களின் கூட்டுக் கலவைகளைப் பிரதிபலிக்கும் “நாஸ்டாலஜி” எழுத்துத் தமிழ் சூழலுக்கு மிகவும் புதியது.
-- ஷரீஃப் அஸ்கர் அலி
Be the first to rate this book.