உண்மையான தங்கள் கொள்கையை வெளிப்படையாகப் பகிரங்கப் படுத்தாமல் இடத்துக்கு ஏற்ற வேடம் கட்டிக் கொண்டு ஆடுகிற தந்திரக் கூட்டம்தான் இந்த ஆர்.எஸ்.எஸ்.! இராணுவப் பயிற்சிகளை இரகசியமாக மேற்கொண்டு கலவரத்துக்குத் தூபம் போடுகிற கயமைக்காரர்களின் கூடாரம்தான் இந்த ஆர்.எஸ்.எஸ். திரைகளின் மறைவுகளிலே நின்று வகுப்புக் கலவரங்களைத் திட்டமிட்டு உருவாக்கி - அதன்மூலம் தங்கள் கால்களை ஊன்றிக்கொள்ள திட்டம் போடும் சதிகாரர்களின் முகாம்தான் ஆர்.எஸ்.எஸ்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைத் தடை செய்ய வேண்டும் என்பது நமது கோரிக்கை அல்ல; அதைக் கருத்துக்களாலே சந்திக்க வேண்டும் என்பதே நமது உறுதியான கருத்து.ஆனால் - தத்துவங்களை விட்டு விட்டு வன்முறைகளுக்கு வித்திடும் அவர்களின் திட்டமிட்ட நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட்டே ஆகவேண்டும். காரணம் - இது ஒரு சமுதாயத்தின் வாழ்வுப் பிரச்சினை; உயிர்ப் பிரச்சினை!வதந்திகளைப் பரப்புவதில் இவர்கள் வெட்கப்படாதவர்கள்; பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதில் இவர்கள் கூச்சப்படாதவர்கள்; மனித உயிர்களின் பலிகளைக் கண்டு பதைபதைக்காமல் மகிழ்ந்து துடிக்கும் கொடுமைத் தனத்தின் கோர உருவங்கள்!
இந்த உருவங்களை நாம் அடையாளம் காட்டவேண்டும்!இந்த உருவங்களின் வரலாற்றுப் பின்னணிகளை மக்கள் மன்றத்தில் தோலுரித்துப் போடவேண்டும்!இந்த அடிப்படைக் கண்ணோட்டத்தில் வாசகர்களோடு சில வரலாற்று உண்மைகளைப் பகிர்ந்து கொள்வதுதான் இந்த நூலின் நோக்கம்!
Be the first to rate this book.