ஷாகா பற்றி கோல்வால்கர் சொல்லும் கதை இதுதான்: "ஒரு பணக்காரர் மாலை நேரங்களில் - தனது அழகான தோட்டத்துக்குச் சென்று மரங்களின் நிழலிலே உட்காருவது வழக்கம். ஒரு நாள் ஒரு மயில், ஒரு மரக் கிளையின் மீது உட்கார்ந்து தனது தோகையை விரித்து ஆடியது. இந்த மயில் இதே நேரத்துக்குத் தினமும் வந்தால் எப்படி இருக்கும் என்று அந்தப் பணக்காரர் நினைத்தார். உடனே அந்த மயிலுக்கு சில தீனிகளைத் தயாரித்து அதோடு அபின் கலந்து போட்டார். அதைச் சாப்பிட்ட மயிலுக்கு மிகவும் மகிழ்ச்சி; அடுத்த நாளும் அந்த அபின் மயக்கத்தை நினைத்து மகிழ்ச்சியோடு அந்த மயில் வந்தது; மீண்டும் அதற்கு அபின் கிடைத்தது; அதைத் தொடர்ந்து மயில் அங்கு வந்து கொண்டே இருந்தது! கடைசியில் - அபின் கிடைக்காவிட்டாலும் அந்த இடத்துக்கு வருவது என்ற பழக்கத்திற்கு அடிமையாகி வந்து கொண்டே இருந்தது.
(கோல்வால்கர் -Bunch of thoughts' நூல் பக் 348) இதுதான் ஷாகாக்களுக்கு - கோல்வால்கர் தந்த உதாரணக் கதை!
அபின் மயக்கத்தைக் காட்டி நிரந்தரமாக மயிலை இழுப்பதுபோல் - வந்தவர்களைப் பிறகு விட்டு விலகிச்செல்ல முடியாத மயக்க மனநிலையை உருவாக்கும் களம்தான் 'ஷாகா!
Be the first to rate this book.