திரைக்கதையைப் படிப்பதும், புத்தகங்களைப் படிப்பதும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான செயல்தான். யாராவது ஒருவர் உங்களிடம் ஒரு கதையைச் சொல்கிறாரென்றால், இந்தக் கதையை இப்படித்தான் படமாக்கப்போகிறேன். அனைத்தையும் காட்சிரீதியாக, வாய்மொழியாகவே உங்களிடம் சொல்லிப் புரியவைத்துவிடுவார்கள். ஆனால், அதுவே புத்தகம் படிக்கிறபோது, அதில் உள்ள கதையை, நீங்கள் உங்களுக்குத் தகுந்தபடி, காட்சிகளாகக் கற்பனை செய்வீர்கள். புத்தகம் படிக்கிறபோது, வார்த்தைகளிலும், வரிகளிலும் உள்ள கதையைக் காட்சியாகக் கற்பனை செய்து பார்க்கிற திறன் உங்களுக்கு வளரும். ஒரு எழுத்தாளர் எந்தவிதமான கற்பனையிலிருந்து வேண்டுமானாலும், அந்தக் கதையை எழுதியிருக்கலாம். ஆனால், வாசகராக நீங்கள் அதைப் படிக்கிறபோது, உங்களிலிருந்து தனிப்பட்ட முறையில் காட்சிகள், கற்பனைகளாக விரியும். கதையில் எழுத்தாளர் உருவாக்கிய உலகம் வேறு. வாசகராக நீங்கள் உருவாக்குகிற உலகம் வேறு. அதேபோலத்தான், திரைக்கதைப் புத்தகங்களைப் படிக்கும்போதும், அதிலுள்ள காட்சிகளைப் படித்து, உங்கள் புரிந்துணர்வின் அடிப்படையில், அந்தக் காட்சியைக் கற்பனை செய்து பார்க்க முடியும். இயக்குநராக வரவிரும்புகிறவர்களுக்கு, திரைக்கதையாசிரியர்களுக்கு இதுவொரு பயிற்சியாகவும் அமையும்.
திரைக்கதைப் புத்தகத்தில் வார்த்தைகளாகயிருக்கிற ஒவ்வொன்றும், எப்படி, திரையில் காட்சியாகப் பரிமாணம் அடைந்திருக்கின்றன என்பதை, இந்தத் திரைக்கதைப் புத்தகங்களின் வழி அறிந்துகொள்ளலாம்.
Be the first to rate this book.