நினைவுகள் இல்லாமல் ஒருவன் ஒரு இடத்துடன் தன்னைத் தொடர்புபடுத்திக் கொள்ளமுடியாது. எனது தாய் நாட்டை நானே கட்டமைத்துக் கொண்டேன். எனது மொழிக்குள் எனது அரசைக் கூட நான் அமைத்துக் கொண்டேன். எனது சொந்த நாட்டில் அல்லது எனது சொந்த வீட்டில் அல்லது எனது சொந்த ஒரு அறையிலேயே கூட நான் பெயர்ந்தலைபவனாக இருக்கலாம். அந்நியனாக இருக்கலாம். பெயர்ந்தலைதல் என்பது புவியியல் சார்ந்த அர்த்தத்தை விடவும் பரந்துபட்டது. இது பாலஸ்தீனம் குறித்த பிரச்சினை மட்டுமல்ல. நான் பெயர்ந்தலைதலுக்கு அடிமைப்பட்டுவிட்டேனோ தெரியவில்லை. அப்படியும் இருக்கலாம். வரலாறு முழுக்க இந்தப் பெயர்ந்தலைதல் இலக்கிய சிருஷ்டிக்கான உந்துதலாக இருந்திருக்கிறது இல்லையா? இந்த நிலம் அதிகமான வரலாற்றையும் அதிகமான தீர்க்கதரிசிகளையும் கொண்டிருந்தது என நாங்கள் அறிந்தபோது, பன்முகத்துவம் அனைத்தும் தழுவியதே ஒழிய ஒரு சிறைச்சாலை அல்ல என்பதனை நாம் அறிந்து கொண்டோம். ஒரே ஒருவர் கடவுளின் மீதும் நிலத்தின் மீதும் நினைவுகளின் மீதும் ஆதிக்கம் கொண்டாட முடியாது என்பதனையும் நாங்கள் புரிந்து கொண்டோம். வரலாறு நியாயமானதோ அல்லது நேர்த்தியானதோ அல்லவெனவும் நாம் புரிந்து கொண்டோம். மனிதர்கள் எனும் அளவில் எமது இலக்கு வரலாற்றை மானுப்படுத்துவதுதான்.
-மஹ்மூத் தர்வீஷ்
Be the first to rate this book.