நெப்போலியனுடைய ஆதிக்க வேட்டைக்கு ஒரு நோக்கம்கூட இருக்கலாம் - அந்த நோக்கம் நேர்த்தியானது என்று திறம்பட வாதிடவும் செய்யலாம். ஆனால் எத்தனை எத்தனை அழிவு, கொடுமை, இழப்பு, இடிபாடு, இடர்ப்பாடு! எல்லாம் கடைசியில் எதற்குப் பயன்பட்டது -ஒரு மாவீரன் மகத்தான வெற்றிகளை, திறமையால், உழைப்பால், திட்டமிடுவதால் பெறமுடிந்தது என்பதை வரலாற்றுச் சுவடியிலே இணைத்துக் காட்டத்தானே! மல்லிகையின் வெண்ணிறத்தை மாற்றிக் காட்டுகிறேன் என்று சூளுரைத்து, மதலையினைக் கொன்று, அந்தக் குருதியிலே மல்லிகையைக் கொட்டி, செந்நிறமேற்றிக் காட்டுவதா! இரத்தம் பொங்கிடும் இருபது ஆண்டுகள், ஓர் இலட்சிய அடிப்படையிலே மேற்கொள்ளப்பட்ட புனிதப் பணி அல்லவே அல்ல! ஆற்றலை அளவுகடந்து பெற்றவன், அவனியை அழித்தேனும், வெற்றிப் புகழ்பெற நினைந்திடும் விபரீத விளையாட்டு அது. உலக வரலாற்றிலே பல நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை, ஏற்படும் பூகம்பம். எரிமலை. பெரும் புயல், பெருவெள்ளம்.
-புத்தகத்திலிருந்து
பேரறிஞர் அண்ணா என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை (15 செப்டம்பர் 1909 -3 பிப்ரவரி 1969), திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) நிறுவனர் மற்றும் முதல் பொதுச் செயலாளர். இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது மாநிலக் கட்சித் தலைவரும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார். பெரியாரின் சீடர், சமூக மாறுதலை தன் எழுத்தின் மூலம் முன்னெடுத்துச் சென்றவர். எழுத்து, பேச்சு, நாடகம், புதினம், திரைப்படம் என பல துறைகளில் சாதனை செய்தவர்.
Be the first to rate this book.