பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் என்பது காலம் காலமாக, அது ஏதோ அருவருக்கத்தக்க நிகழ்வு என்று பார்க்கப்படுகிறது. மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணை தனிமைப்படுத்திவைக்கும் நிகழ்வுகள் இன்றும் சில கிராமப்புறங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், மாதவிடாய் காலகட்டத்தில் பெண்ணின் உடலில் ஏற்படும் மாற்றங்கள், அவர்கள் எதிர்கொள்ளும் வலிகள், பொது இடங்களில் உணரும் அசெளகர்யம் இவையெல்லாம் பெண்கள் மட்டுமே உணர்ந்துகொள்ளக்கூடிய உணர்வு சார்ந்த நிகழ்வுகள். பீரியட்ஸ் எனப்படும் மாதவிடாய் குறித்து அவள் விகடனில் வெளியான தொடர் கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. எந்த வயதில் பூப்படைதல் சரி, சரியான வயதுக்கு முன்னமே பூப்படைதல் ஏன், எதனால், மாதவிடாயின்போது பெண்கள் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், சீரற்ற மாதவிடாய் ஏன் ஏற்படுகிறது... என மாதவிடாய் குறித்து வெளிப்படையாகப் பேசி அனைத்து சந்தேகங்களுக்கும் சரியான விளக்கங்கள் தந்திருக்கிறார் நூலாசிரியர் டாக்டர் நித்யா ராமச்சந்திரன். பெண்களின் மாதவிடாய் குறித்த பொதுவான கண்ணோட்டத்தை இந்த நூல் மாற்றியமைக்கும்.
Be the first to rate this book.