மும்பையில் பங்குச் சந்தையில் குண்டுகள் வெடித்தன. பேருந்தில் குண்டுகள் வெடித்தன. மக்கள் கூடும் சந்தையில் குண்டுகள் வெடித்தன. மருத்துவமனையில் குண்டுகள் வெடித்தன. ஏன்.. ரயில் நிலையத்திலும் புகழ்பெற்ற தாஜ் ஹோட்டலிலும்கூட குண்டுகள் வெடித்தன. அன்றாடம் மக்கள் பயணிக்கும் ரயில்வண்டிகளில் குண்டுகள் வெடித்தன. ஏன் வெடித்தன? யார் காரணம்? யாருக்கும் தெரியாது.. ஆனால், யார் பாதிக்கப்பட்டார்கள்? பாதிக்கப்பட்டவனுக்கு மதம் இருக்கிறதா? இனம் இருக்கிறதா? மொழி இருக்கிறதா? எதுவுமில்லை. பாதிக்கப்பட்டவர்கள் எல்லோருமே மனிதர்கள்தாம். அவர்களின் வலி, வேதனை, காயங்களுக்கு அரசியல் இல்லை, மதமும் இல்லை. இந்த அனுபவங்களின் ஊடாகப் பயணிக்கிறது இந்தக் கதை. இது பாதிப்புகளைக் காட்சிகளாக மட்டுமே கண்ட மனமல்ல. நேரடியாக அனுபவித்த மனமும்கூட. ‘நீ நீயாகவும் நான் நானாகவும் இருப்போம். இருவரும் சேர்ந்தே நாம் வாழும் பூமியை நல்ல வண்ணம் ஆக்குவோம்’ என்று சொல்ல வேண்டியது மட்டுமல்ல, வாழ்ந்தும் காட்ட வேண்டிய தருணமிது. ‘ரசூலின் மனைவியாகிய நான்’ உங்கள் கதவுகளைத் தட்டுகிறாள். தண்டவாளத்தில் சக்கரங்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றன. மும்பை தூங்குவதில்லை. புதியமாதவியின் எழுத்துகளும்தாம்!
Be the first to rate this book.