நீரோடை மகேஸ்
மென்பொருள் பொறியாளர். கவிஞர். எழுத்தாளர், சிறார் செயற்பாட்டாளர். இயற்கை ஆர்வலர், நீரோடை இலக்கிய அமைப்பின் நிறுவனர், நீரோடை மின்னிதழ் பொறுப்பாசிரியர். பதினைந்து ஆண்டுகளாக நீரோடை வலைதளம் (Neerodai.com) வாயிலாக இலக்கிய சேவை. கதை சொல்லிகளை ஒருங்கிணைத்து சிறார் கதைகள் வெளியிடுதல், கவிதை போட்டி நடத்தி கவிஞர்களை ஊக்குவித்தல்.
குழந்தைகள் மொழியில், எவ்வித திணிப்பும் இன்றி, அவர்களே உணர்ந்து நம்முடைய பாரம்பரிய உணவுகளை நோக்கி பின்பற்றத் தூண்டும் நுழைவாயிலாக இராணி எறும்பின் இரகசிய சமையலறை நூல் அமையும் என நம்புகிறோம்.
எறும்புப் புற்றிலிருந்து வெளியே வந்து நம்மை வியப்பில் ஆழ்த்தும் இராணி எறும்பு என்ன சொல்கிறது. எறும்புகளிடம் பேச எறும்புகளின் பேச்சைக் கேட்க காதுகளைக் கூர்தீட்டி வாருங்கள் எறும்பின் வீட்டிற்குள் (புத்தகத்திற்குள்) செல்லலாம்.
Be the first to rate this book.