ரங்கோன் ராதா, கா. ந. அண்ணாதுரையால் எழுதப்பட்ட, 22 அத்தியாயங்கள் கொண்ட புதினமாகும். சமூகத்தில் முக்கியமாக உள்ள பெரிய புள்ளிகளின் உண்மையான இயல்பை கதையாக எழுதியுள்ளார். பெரிய மனிதர்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட சமுதாயத்தை நேர்மை மனப்பான்மை கொண்ட தனிமனிதன் எதிர்க்கும் நிலையில் சந்திக்கும் இடையூறுகளையும் அண்ணாதுரை இக்கதையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கதையானது ரங்கோன் ராதா எனும் தமிழ்த் திரைப்படமாகவும் வடிவம் பெற்றது.
பேரறிஞர் அண்ணா என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை (15 செப்டம்பர் 1909 -3 பிப்ரவரி 1969), திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) நிறுவனர் மற்றும் முதல் பொதுச் செயலாளர். இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது மாநிலக் கட்சித் தலைவரும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார். பெரியாரின் சீடர், சமூக மாறுதலை தன் எழுத்தின் மூலம் முன்னெடுத்துச் சென்றவர். எழுத்து, பேச்சு, நாடகம், புதினம், திரைப்படம் என பல துறைகளில் சாதனை செய்தவர்.
Be the first to rate this book.