கலைஞர் மு.கருணாநிதியின் கைவண்ணத்தில் உருகொண்ட மதத்தில் புரட்சி செய்த மகானான இராமானுஜரின் இறை அனுபவம் இந்நூல். இது தொலைக் காட்சியில் தொடராக வந்தபோது மிகுந்த ஆரவாரத்துடன் பேசப்பட்டு, எல்லோராலும் கவனித்துப் பார்க்கப்பட்டது. பகுத்தறிவு பேசிய கலைஞர், பக்தி மார்க்கமா என்கிற விவாதமும் எழுந்தது. பாகுபாடற்ற சமுதாயம், ஏற்றத் தாழ்வற்ற சமூகநீதி உள்ளிட்ட இராமானுஜரின் முற்போக்கு கருத்துகளை வலியுறுத்துவதே என் எழுதுகோலின் நோக்கம் என உறுதிகாட்டிய கலைஞரால் படைக்கப்பட்ட அரிய நூல் இது. பகுத்தறிவும். பக்தியும் கலக்கும் பரமபத வாழ்வை இப்படைப்பு தரிசிக்கச் செய்கிறது.
Be the first to rate this book.