ராஜம் கிருஷ்ணன் தான் எழுதிய சிறுகதைகளில் பெண் விடுதலைச் சிந்தனைகளை ஆழமாக முன் வைத்துள்ளார். ஆனால் அவர் படைத்த பெண்கள் தங்கள் இலக்கில் வெற்றியடைந்தார்கள் என்று கூற முடியாது. என்றாலும் அவர் சிறுகதைகளின் வாயிலாக, அடிமைத் தளையில் முடங்கிக் கிடந்த பெண்ணினம் விழிப்படைய, தொடர்ந்து முயற்சிகள் செய்துள்ளார் என்பதை மறுக்க இயலாது. ராஜம் கிருஷ்ணன் பேசிய பெண் விடுதலை மரபு வழிபட்ட தமிழ்ப் பண்பாட்டுக் கட்டுமானங்களை அடியோடு தகர்க்கவில்லை என்றாலும். அதனை அசைத்துப் பார்த்தது என்பதை உறுதியாகக் கூற முடியும்.
Be the first to rate this book.