"புதியயுக ராவணன்" என்று பாஜகவின் மிரட்சியான சித்தரிப்பு, பத்துத்தலை ராகுலை 140 கோடி தலையுள்ள ஜெய ஜெயராமன் ஆக இன்று தேர்தல் களத்தில் பரபரப்பாக களம் ஆட செய்து கொண்டிருக்கிறது...!
எல்லாம் அன்பின் ஆட்சி...! இந்திய மக்களின் ஈரமுள்ள நெஞ்சம் சுரக்கும் பெருங்கருணைப் பெருவெள்ளத்தின் சாட்சி அது.!
இந்தியப்பாராளுமன்றம், மோடி மீதான ராகுலின் வண்ணமயமான குற்றச்சாட்டுச் தோரணங்களால் அன்றாடம் பொதுப்பொலிவு பெற்று காட்சி தருகிறது...!" களைகட்டி
புல்வாமா தாக்குதல் குறித்த கேள்விகளாகட்டும், மணிப்பூர் குறித்த சவுக்கு சுழற்றலாகட்டும், அதானி குறித்த ராஜாங்க கூட்டு சதிகளாகட்டும், ராகுலின் கேள்விக் கணைகளுக்கு ஆளும் அரசாங்கம் நாளும் ஒரு நரசிம்ம வதத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது...! நாங்கள் எங்கள் கூட்டணிக்கு இந்தியா என்ற பெயர் வைத்தது ஒரு நல்ல சிந்தனை.
ஏனெனில் அது நாங்கள் யார் என்பதை உணர்த்துகிறது...! நாங்கள் எங்களை இந்தியாவின் குரலாகக் கருதுகிறோம். இது பிரதமர் மோடியை நாட்டின் பெயரை மாற்ற என்னும் அளவுக்கு பாதித்துள்ளது என்கிறார் ராகுல்.
பிரதமர் மோடியை கவுதம அதானி ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்குகிறார் என்பது ராகுலின் பிரதான குற்றச்சாட்டு-
அடித்தட்டு மக்களிடையே மிகவும் அன்னியோன்யம், கிராம மக்களிடையே ஆழ்ந்த தொடர்பு, காங்கிரஸ் கட்சிக்குள் சிறந்த ஜனநாயக பண்பினை கொண்டு வரும் முயற்சி, என அனைத்து இந்திய மக்களிடையே ஒரு அன்பின் அடையாளமாய் ராகுல் காந்தியின் பணியனைத்தும் இன்று முத்திரை பதித்து வருகிறது...! திசை மாறிய காட்டாறு ராகுல் வடிவத்தில் ஒரு மிகப்பெரிய ராட்சச மலையை புரட்டப் போகும் ஆனந்தச் செய்தியை முன்னோட்ட மாகச்சொல்கிறது இந்நூல்...!
Be the first to rate this book.