கிறிஸ்டி சுபத்ரா
வாழ்க்கை மாற்று வெளிகளைக் கொண்டது என்பதை என் 17வது வயதில் உணர்ந்துகொண்டபின் மாணவ இயக்கம். பெண்ணிய சிந்தனை. மாற்றுக் கல்வி என பல தளங்களில்... இன்றுவரை என் தேடல்கள் தொடர்கின்றன.
80-களின் தொடக்கம் முதல் 90-களின் தொடக்க ஆண்டுகள் வரை... நிறைய பயணங்கள், போராட்டங்கள். எழுத்து, பாடல், பத்திரிகை என்று ஒரேநேரத்தில் பன்முக செயல்பாடுகளில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் இருந்து இருக்கிறேன். அந்த சமயத்தில் 'சுட்டும் விழிச்சுடர்' பத்திரிகையும் 'எந்தன் தோழா' கவிதை தொகுப்பும் என் அடையாளங்களாய் இருந்தன.
கீதாஞ்சலி, பாலின பாகுபாடும் சமூக அடையாளங்களும், சொல் அறம் ஆகிய மூன்று புத்தகங்களும் என்னை எனக்கு அடையாளம் காட்டும் படைப்புகளாய் இப்போது இருக்கின்றன. கைதட்டல். புகழ், பெருமை தாண்டிய நியமங்களுக்கு அப்பாற்பட்ட கனிவுமிக்க அன்பே என் ஆன்மிகமாய் இருக்கிறது. அதுவே கீதாஞ்சலிக்கு என்னை நெருக்கமாக்கியது.
அன்பைத் தவிர வேறு அனைத்தையும் துச்சமாய்க் கருதும் என் குடும்பம் என் ஆதார சுருதியாய் அடித்தளமாய் நிற்கிறது.
Be the first to rate this book.