'ராமனின் கனவு' என்ற இந்த ஆங்கில நாவலின் ஆசிரியை இந்தியரை மணந்த ஓர் அமெரிக்கப் பெண்மணி. அவரது கணவனும் அவரும் கொடைக்கானல் மலை வாசஸ் தலத்தில் வசித்த காலத்தில் உருவானது இந்த நூல். ஸ்ரீமதி ஷெர்லி அவர்கள் அமெரிக்கப் பெண்மணியானாலும் இந்திய நாட்டுப் பண்பை-குறிப்பாக தமிழ் நாட்டுப் பழக்க வழக்கங்களை நன்கு புரிந்துகொண்டு, இந்தக் கதையைப் புனைந்துள்ளார்.
ராமன் என்ற ஏழைச் சிறுவனுக்கு கல்வி கற்பதில் உள்ள ஆர்வத்தையும், புஸ்தகம் படிக்கும் ஆசையையும் வைத்து உணர்ச்சி ததும்பும் முறையில் இந்த நவீனத்தைப் புனைந்துள்ளார். கதையில் வரும் நடேச தாத்தாவும், அவர் கூறும் கதையில் வரும் கற்பனைப் புலியான மஞ்சள் கண்ணன், பொறுமையே உருவான ராமனின் தாய் ஆகிய பாத்திரங்களுடன் புஸ்தகக் கடை தம்புசாமியையும் நாம் மறக்கவே முடியாது.
Be the first to rate this book.