கவிஞரே தன் கவிதைகள் பற்றிச் சொல்வதுபோல, இவை எளிமையான வெளிப்பாடுகள்தான். ஆனால், உழுசால் செதுக்கிச் செல்லும் கொழுமுனையின் எளிமை. போலித்தமோ, வெற்று ஆரவாரமோ சற்றும் இல்லாதவையே. எனில், மழைப் பறவையின் குரல் கணவாயில் எதிரொலிக்கும் அப்பட்டம். உண்மையானவை என்பதை ஆமோதிக்கும் முகாந்திரம்.
என்னைக் கரைந்தழைக்கும் நண்பனாக நானும் காகத்தைப் பார்க்கிறேன்; என்னிடமும் எப்போதும் உள்ளது. ரகசியக் கூர்வாள் ஒன்று; நானும் பரபரப்புடனும் பதைபதைப்புடனும் வாழ்க்கையைத் தொடர்கிறேன். அப்போதெல்லாம் நானும் ஏங்குகிறேன்:
'இந்த மனித முகங்களில் பொய்மையற்ற இயல்பான புன்னகை மலர்ந்தால் போதுமே.ஏதேனும் ஒரு மலர்போல.
-யூமா வாசுகி
Be the first to rate this book.