ஜெயஸ்ரீயின் சிறுகதைகளில் எதார்த்த வாழ்வின் சவால்களை எதிர் கொண்டு வெற்றி பெற முனைப்போடு பாடுபடும் பெண்கள் நிறைந்திருக்கிறார்கள். அழகு நிலையத்தில் பணிபுரியும் பெண், வங்கியில் பணிபுரியும் பெண், குடும்பப்பொறுப்புகளை நிறைவேற்றப் பாடுபடும் பெண், படித்த பெண், படிக்காத பெண் என பலவிதமான பெண்களின் உலகத்தை ஜெயஸ்ரீயின் சிறுகதைகள் சித்தரிக்கின்றன. எதிர்பாராத வகையில் வாழ்வில் துயரம் கவியும் தருணங்களில் கூட தன்னிரக்கத்தில் ஆழ்ந்து சுருங்கிவிடாதவர்களாகவும் மன உறுதியுடன் எதிர்கொண்டு அத்துயரத்தை வெற்றிகொள்ள முற்படுகிறவர்களாகவும் அப்பெண்கள் இருக்கிறார்கள். எண்ணற்ற இழப்புகளைச் சந்தித்த போதும் அப்பெண்கள் ஒரு தருணத்தில் கூட தம் நேர்நிலையான இயல்பை இழப்பதில்லை. எழு, எதிர்கொள் என்பதே ஜெயஸ்ரீ சித்தரிக்கும் பெண்களின் பார்வையாக இருக்கிறது
Be the first to rate this book.