விடுதலைப் புலிகளின் அமைப்பில் பசீலன் பீரங்கி படைப்பிரிவில் பணிபுரிந்த கேப்டன் மலரவன் (லியோ) என்றழைக்கப்பட்ட காசிலிங்கம் விஜித்தனின் (1972 - 1990) இரண்டாவது நூல் இது. மலரவனின் மறைவிற்குப் பிறகு இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டு ஈழத்தில் வெளியிடப்பட்டது. மலரவனின் முதல் நூல், 'போர் உலா' (விடியல், அக்டோபர் 2011). 1980களில் பல்கலைக் கழக மாணவர்கள் விடுதலை இயக்கங்களில் பங்கேற்க ஆரம்பித்த சூழலை ஒரு குடும்பத்தின் அன்பான பின்னணியில் சித்தரிக்கிறது இந்த நாவல். மாணவர்களுக்கிடையே விடுதலைப் போராட்டத்தைக் குறித்தும் அதில் பெண்களின் பங்கேற்பைக் குறித்தும் உரையாடல்கள், விவாதங்கள் நடைபெற்ற காலகட்டத்தை பதிவுசெய்யும் வகையில் இது முக்கியமான வரலாற்று நூல்.
Be the first to rate this book.