புதுமைப்பித்தன்இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சிறுகதைப் பரப்பின் பரிபூரண நவீனத்துவக் குழந்தை. தமிழில் நவீனச் சிறுகதை தோற்றம் கொள்ளத் தொடங்கிய ஆரம்பகட்டத்திலேயே பெரும் கலைப் பாய்ச்சலோடு படைப்பாக்கத்தில் ஈடுபட்டவர். நவீனத்துவ வெளிக்குள் பிரவேசித்து அதன் எல்லைகளுக்குள் ஊடாடியபடியேதன்னியல்பாக அதன் எல்லைகளை மீறிவிரிந்து விகாசம் கொள்ளும் படைப்புலகம் அவருடையது. அவருடைய நவீனத்துவக் கண்களின் வெளிச்சத்தில் புலர்ந்ததுதான் நவீனத் தமிழ்ச் சிறுகதை. புதுமையின் மீதான வேட்கையும் கலையின் மீதான பித்தும் கூடி முயங்கிய படைப்பாளுமை. சிறுகதை வடிவத்தின் சாத்தியங்களைப் பெருமளவுக்குக் கண்டடைந்தவர்; காலங்கள் கடந்தும் பொலிவு குன்றாத வசீகரப் படைப்பு மொழியும், அறியாத பிரதேசங்களிலும் மிக எளிதாய் பிரவேசிக்கும்அதீதக் கற்பனைச் சிறகுகளும் கொண்டது அவரது கதைகள்.
-சி.மோகன்
Be the first to rate this book.