புதுக்கோட்டையைப் புரிந்துகொள்வதொன்றும் கடினமல்ல, அத்தனை எளிதுமல்ல. நடக்கையில், ஓடுகையில் ஓர் ஓடோ, ஒரு கல்லோ காலைத் தடுக்கினால் அவை மூத்தகுடிகள் விட்டுச் சென்ற சுவடுகளாக இருக்கக்கூடும். அந்தளவிற்குத் தொல்குடிச் சான்றுகள் நிரம்பப் பெற்ற ஊர். சோழ, பாண்டியப் பேரரசுகள் தம் எல்லைகளை வகுத்துக் கொண்டது இங்கேதான். ஐந்திணை நிலங்கள், அந்நிலங்களுக்குரிய பண்பும் குணாம்சங்களும் கொண்ட மக்கள். ஆதிகுடிகள், ஆண்ட குடிகள், அதிகாரக் குடிகள், ஆதிக்கக் குடீகள், ஆதிக்கத்தை மீறும் குடிகள் என்று பலதரப்பட்ட சமூக மக்களைக் கொண்ட பிரதேசம். தமிழக நிலப்பரப்பிலிருந்த ஒரே தனியரசு மட்டுமல்ல புதுக்கோட்டை. தமிழ் ஆட்சி மொழியான முதல் தமிழரசும் கூட. புதிய நகரம் எனும் பொருளில் உலகில் சில நகரங்களே உள்ளன. அவற்றிலொன்று புதுக்கோட்டை. இவ்வூரிலுள்ள கோட்டைகளும் கொத்தளங்களும் பழைமை ஆகலாம். ஊரும் பெயரும் ஆகாது.
இயற்பெயர் க.இராஜமாணிக்கம் கந்தர்வகோட்டை வட்டம் புதுக்கோட்டை மாவட்டம் கணிதப் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றுகிறார். சிறுகதை, புதினம். கட்டுரை. மாவட்ட வரலாறு சொல்லாய்வு என்று பல்துறைகளில் இலக்கியப் பங்களிப்பு செய்துவருகிறார். இதுவரை ஒன்பது சிறுகதைத் தொகுப்புகள் வந்து புதினங்கள் மூன்று குறும்புதினங்கள் உட்பட இருபந்து ஐந்து நூல்கள் எழுதியுள்ளார். இவரது பிராண நிறக் கனவு எனும் சிறுகதைத் தொகுப்பு தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை விருதும் அன்னமழகி எனும் நாவல் எழுத்து-திருமதி சௌந்தரா கைலாசம் இலக்கியப் பரிசு வழங்கும் ரூபாய் இரண்டு இலட்சங்கள் பரிசும் பெற்றன. மேலும் இவர் பல இலக்கிய அமைப்புகளால் விருதும் பரிசும் பெற்றவர்.
புதுக்கோட்டையை மையமாகக் கொண்டு தொடர் நூல்கள் கெயண்டு வருகிறார். புதுக்கோட்டை பன்றி நாடு முதல் புதுகை வரை (பாகம்-1) எனும் மாவட்ட வரலாறு நூலைத் தொடர்ந்து புதுகை வட்டார சொல்லகராதி எனும் நூல் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை நிதியுதவி பெற்று வெளிவந்தது அண்டனூர் சுரா சிறுகதைகள் 100' எனும் க்கு தொகுப்புகள் 2004 முதல் 2024 வரையிலான சிறுகதைகளின் தொகுப்பாகம்
Be the first to rate this book.