கவிதையை மடக்கி மடக்கி எழுதுகிறோம். உரை நடையைத் தொடர்ந்து எழுதிச் செல்கிறோம். எனவே இவை வெறும் புறவடிவம் சார்ந்த நிலையில் மட்டுமே வேறுபாடு கொண்டவை என்று எண்ணுதல் கூடாது. இரண்டுமே தனித்தனியான முனைப்பான தனிப்பண்புக் கூறுகளைக் கொண்ட - துறைகள். கவிதையையும் உரைநடையையும் பின்வருமாறு ஒப்பிட்டு -வேறுபடுத்திக் - காட்டலாம். கவிதை கடற்பரப்பைப் போன்றது; உரைநடை நிலப்பரப்புப் போன்றது. கடற்பரப்பு திரவநிலை சான்றது; நிலப்பரப்பு திடநிலை சான்றது. முன்னது அலையதிர்வுகள் கொண்டது; பின்னதோ வெட்டுத் தடங்கள் நிரம்பியது. கடலும் நிலமும் தம்முள் வேறுபாடுடையன என்பதை மறுப்பார் யார்? எனவே கவிதையும் உரைநடையும் ஸ்தூல நிலையில் மட்டுமன்றி சூக்கும நிலையிலும் வேறுபட்டுப் பிரிந்து நிற்பன என்பது வெளிப்படை
Be the first to rate this book.