மனதை ஆக்ரமிக்கும் கவலையை ஜெயிக்கமுடியாமல் போராடி க்கொண்டிருப்பவரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்குத் தேவையான புத்தகம் இதுதான்.
“துன்பப்படுவதில் உள்ள இரகசியம், நீங்கள் சந்தோசமாக இருக்கிறீர்களா, இல்லையா என்பதைப்பற்றிக் கவலைப்படும் அளவுக்கு உங்களுக்கு ஓய்வு நேரம் இருக்கிறது என்பதுதான்."
கவலையைப்பற்றிய அடிப்படை உண்மைகளையும், அதை ஆராய்ச்சி செய்யும் உத்திகளையும் முன்வைக்கிறது இந்தப் புத்தகம். களைப்பை, கவலையைத் தடுக்கும் வழிகளைப் பேசுகிறது: நிம்மதியை, சந்தோசத்தைக் கொண்டுவரும் மனப்பான்மையைக் கட்டமைக்கும் வழிகளையும் பேசுகிறது. கவலைப்படும் பழக்கத் திலிருந்து வெளியே வருவதற்கான அறிவுபூர்வமான சிந்தனைகளை வரிசைப்படுத்துகிறது. கவலை தரும் சூழ்நிலைகளைத் தீர்க்கும் ஒரு மந்திர சூத்திரத்தையும், கவலையை முற்றிலும் ஒழித்துக்கட்டும் வழியையும் அறிமுகப்படுத்துகிறது இந்தப் புத்தகம்.
புரிதல்களின் டேல் கார்நெகியின் சொந்த அனுபவங்களின், விளைச்சலான புதிதாய் கவலையின்றி வாழ்வது எப்படி என்ற இந்தப் புத்தகம் பல லட்சம் வாசகர்களுக்கு எழுச்சியைத் தந்து கவலைகளை வெல்ல அவர்களுக்கு உதவி செய்திருக்கிறது. அமரத்துவம் வாய்ந்த நடைமுறை அறிவுரைகளைப் போதிக்கும் இந்தச் செவ்வியல் 'பெஸ்ட்செல்லருக்கு உங்களின் எதிர்காலத்தை மாற்றக்கூடிய அபரிமிதமான அற்புதமான ஆற்றல் உண்டு.
Be the first to rate this book.