தகவல் தொழில் நுட்பத் துறையில் பெரிய பதவியில் இருந்தாலும், தமிழின் மீது கொண்ட காதலால், கவிதை. கட்டுரை, நாடகம் என்று பல பரிமாணங்களில் தன்னை வெளிபடுத்திக் கொண்டிருக்கிறார். புரிதல் போதும் இன்றைய தலைமுறை நிச்சயம் படிக்க வேண்டிய கதை.
இளைய சமூகத்தினர் மேலைநாட்டின் நாகரீகத்தில் மூழ்கி, சுதந்திரம் என்ற பெயரில் புரிதல் போதாமல் மண வாழ்க்கையை முறித்துக் கொள்கின்றனர். இதைத்தான் ஆசிரியர் இந்தக் கதையின் வாயிலாக மிகவும் தெளிவான எளிய நடையில் புரிய வைக்கிறார். புரிதல் இல்லை என்றால் சிறிய தவறுகள் கூட பூதாகரமாகி பிரச்சன்னையை பெரிதாக்கும் என்பதை அழகாக விலைகுகிறார்.
நாயகன் ராகுலும் ஸ்வேத்தாவும் ஈகோவை மறந்துவிட்டு பேசி இருந்தால் மனச்சுமை வந்திருக்காது.
கதையின் மூலம் புரிதல் இல்லையேல் பிரிதல் தான் மிஞ்சும் என்பதை இந்தத் தலைமுறையினருக்கு உணர்த்தியுள்ளார்.
மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
- பதிப்பகத்தார்
Be the first to rate this book.